பகவத் கீதை

अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते ।
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः ॥ ८॥
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே |
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா: ||     10.8

எல்லாப் பொருள்களின் உற்பத்திக் காரணம் நான். அவை செயலாற்றும் சக்தியையும் என்னிடமிருந்தே பெறுகின்றன. இதை அறிந்த ஜ்ஞானிகள் என்னிடம் அன்பைச் செய்கிறார்கள்.

இவ்வுலகிலுள்ள பலவிதமான சேதன அசேதனங்களின் உற்பத்திக்கு நானே காரணம். என்னால் கொடுக்கப்பட்ட சக்தியைக் கொண்டே அவை பலவித செயல்களைச் செய்கின்றன. இப்படி எனக்கேயுள்ள தனிச்சிறப்பை ஞானிகள் அறிந்து என்னிடம் அன்பு மிகுந்து பக்தியைச் செய்கிறார்கள்.

இப்படி சில சுலோகங்களில் பகவத் பக்தி உண்டாகும் வழியைச் சொன்னான் பகவான். பக்தி உண்டானவர்கள் பொழுது போக்குவது எவ்விதம் என்பதை அடுத்தபடி சொல்லுகிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top