பகவத் கீதை

பன்னிரெண்டாம் அத்யாயம் -பக்தியோகம்

अर्जुन उवाच –
एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते ।
ये चाप्यक्षरमव्यक्तं तेषां के गवित्तमाः॥ १॥

அர்ஜுன உவாச:
ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே |
யே சாப்யக்ஷரம் அவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா: ||        12.1

இரண்டாம் ஷட்கம், பன்னிரெண்டாம் அத்யாயம், அவதாரிகை

கீழ் அத்தியாயத்தில் அர்ஜூனன் விரும்பியபடி பகவான் தன் விச்வரூபத்தைக் காட்டி அருளினான். அந்த வடிவத்தில் உலகமெல்லாம் அடங்கியிருப்பதையும், அவைகளை பகவான் அடக்கி ஆண்டு அழிக்கும் சக்தியையும் அர்ஜூனன் கண்டான்.

பிறகு அர்ஜூனனின் வேண்டுகோளின்படி தன் பழைய க்ருஷ்ண உருவத்தையே எடுத்துக் கொண்ட கண்ணன், "என்னுடைய விச்வரூபத்தை எவராலும் காண முடியாது; நீ எனது பிரியமான பக்தனகையினால் அதை நான் உனக்குக் காண்பித்தேன்," என்று சொல்லி, "பக்த்யா த்வநந்யயா சக்ய: அஹமேவம் விதோர்ஜுன! ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப" பக்தி ஒன்றினாலேயே என்னை எவனும் உள்ளபடி அறியவோ காணவோ, என்னை அடையவோ முடியும்" என்று சொல்லி, பதினோராம் அத்யாயத்தை முடித்திருக்கிறான்.

அதைக் கேட்ட அர்ஜூனனுக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. முதல் ஷட்கத்தில், ஆத்ம சிந்தனம் செய்து, ஆத்ம தரிசனம் பெற்று அவ்வழியாலே ஒருவன் பகவானை அடையலாம் என்று கண்ணன் கூறியிருக்கிறானே; அது சிறந்ததா அல்லது இப்போது அவன் கூறும் பக்தி மார்க்கம் சிறந்ததா என்று கண்ணனை வினவுகிறான்.

ஸ்லோகத்தின் பொருள்:

அர்ஜூனன் கேட்டான்.

க்ருஷ்ண! உம்மை அடைய விரும்புகிறவர்களில், உம்மிடம் பக்தி செய்பவர்கள் மேம்பட்டவர்களா அல்லது (நீர் முதல் ஷட்கத்தில் சொன்ன) புலன்களை விஷயங்களில் செல்லாமல் அடக்கி, ஜீவாத்ம சிந்தனம் செய்து, ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெற்று பிறகு உம்மை அடைபவர்கள் சிறந்தவர்களா? இவ்விரு உபாயங்களில் எது சிறந்தது? என்று அர்ஜுனன் வினவினான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top