பகவத் கீதை

अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्मपरमो भव ।
मदर्थमपि कर्माणि कुर्वन्सि‍द्धिमवाप्स्यसि ॥ १०॥

அப்யாஸப்யஸமர்த்தோஸி மத்கர்மபரமோ பவ |
மவர்த்தமபி கர்மாணி குர்வந் ஸித்திம் அவாப்ஸ்யஸி ||        12.10

மேலே சொன்னபடி என்னை தியானிப்பதில் பழக்கம் செய்து கொள்ளவும் உனக்கு வல்லமை இல்லையாகில் எனக்கு உகந்து பணி செய்வதில் ஈடுபட்டிருப்பாய். (இப்படி நான் உகக்கும் தொண்டுகளைச் செய்து வந்தாயாகில், என்னை தியானம் செய்வதில் பழகி, என்னிடம் நிலையாக அன்பைச் செய்து நீ என்னையே அடைவாய்).

பகவான் உகக்கும் தொண்டுகளாவன - கோயில் கட்டுதல், பூந்தோட்டம் அமைத்தல், திருவிளக்கு ஏற்றுதல், திருவிலகு சேர்ப்பது, தண்ணீர் தெளித்தல், புஷ்பமாலை கட்டுதல், வலம் வருதல் (ப்ரதக்ஷிணம்), ஸ்தோத்திரம் பண்ணுதல், நமஸ்கரித்தல் முதலியவைகளை அன்புடன் செய்து வந்தால், அவனை தியானம் செய்யத் தடையான நம் பாபங்கள் விலகும். பிறகு அவனைத் தியானம் செய்யப் பழகிக் கொண்டு, அவனிடம் பக்தியைச் செய்து அவனையே அடையலாம்.

மேலே சொன்ன தொண்டுகளை பணத்தினாலோ, உடலினாலோ தான் செய்ய வேண்டுமென்பதில்லை. மனத்தினாலும் வாக்காலும் செய்யலாம். எப்படிச் செய்தாலும் பகவான் திருவுள்ளம் உகந்து நமக்கு, ஆத்ம நன்மையைச் செய்கிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top