தூக்கத்தை வென்ற அர்ஜூன! ஜங்கம ஸ்த்தாவரங்கள் கொண்ட முழு உலகையும் எனது இந்த ஓர் உருவின் சிறிது பாகத்தில் அடங்கியிருப்பதை நீ காண்பாய். இன்னும் வேறு எதைக் காண நீ விரும்புகிறாயோ, அவைகளை எல்லாம் என் விச்வ ரூபத்தில் காண்பாய் (இப் போரில் தாங்கள் வெற்றி பெறுவோமா, அல்லது கௌரவர்கள் வெற்றி பெறுவார்களா, என்கிற அர்ஜுனன் சந்தேகத்தையும் இந்த விஸ்வ ரூபத்தில் தெளியக் காணலாம் என்பது கருத்து).