ஸஞ்சயன் உத்தம அதிகாரி, அந்த புத்திகெட்ட திருதராஷ்டிரனுக்கு, கண்ணனுடைய மேன்மை யெல்லாம் மனத்தில்படும்படி நன்றாக உரைக்க வல்லவன்; ஆதலால் பகவான் அவனுக்கும் திவ்யசக்ஷுஸ்ஸைக் கொடுத்து தன் விச்வரூபத்தைப் பார்க்கச் செய்தான். “அரசே! என்ன ஆச்சர்யம் இப்படி கண்ணன் சொன்ன உடனேயே தன் தோழனும் அத்தை மகனுமான அர்ஜுனனுக்குத் தன் விச்வ ரூபத்தைக் காட்டி அருளினான்” என்கிறான் ஸஞ்சயன்.