பகவத் கீதை

अनेकवक्त्रनयनमनेकाद्भुतदर्शनम् ।
अनेकदिव्याभरणं दिव्याने कोद्यतायुधम् || १० ||
அநேகவக்த்ர நயநம் அநேகாத்புததர்சநம் |
அநேகதிவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம் ||     11.10

அந்த விசுவரூபம் இருந்தபடி எங்ஙனே எனில்? அவ்வடிவில் அநேக முகங்கள், கண்கள், பல அதிசய காட்சிகள், தெய்வீகமான பல ஆபரணங்களை அணிந்தும், தெய்வீகமான பல ஆயுதங்களை கைகளில் எந்தியுமிருந்தது. அவ்வுருவம்.

மேலும் அவ்வுருவம் திவ்யமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்து, திவ்யமான கந்தம் பூசியதும் பெரும் வியப்பூட்டுவதும், பிரகாசித்தது எங்கும் முகமுடையதாகவுமிருந்தது. முக்காலத்திலும் உள்ளவைகளுக்கெல்லாம் இருப்பிடமாயும், இடம், காலம் இவைகளால் அளவிட முடியாததாயும் தன் ரூபத்திற்குத் தகுந்த ஆபரணங்களையும் மாலைகளையும் அணிந்து ஒளிவிட்டு பிரகாசித் திருந்தது.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top