பகவத் கீதை

संजय उवाच एवमुक्त्वा ततो राजन्महायोगेश्वरो हरिः ।
दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम् । ॥ ९ ॥
ஸஞ்சய உவாச | ஸஞ்சயன் கூறுகிறான்:
ஏவம் உக்த்வா ததோ ராஜந் மஹாயோகேச்வரோ ஹரி: |
தர்சயாமாஸ பார்த்தாய பரமம் ரூபம் ஐச்வரம் ||     11.9

திருதராஷ்டிர மகாராஜாவே! மஹேச்வரனான ஹரியானவர் இங்ஙனம் உரைத்த பின்பு, பார்த்தனுக்கு மேலேன தன் ஈச்வர ரூபத்தைக் காட்டியருளினான்.

ஸஞ்சயன் உத்தம அதிகாரி, அந்த புத்திகெட்ட திருதராஷ்டிரனுக்கு, கண்ணனுடைய மேன்மை யெல்லாம் மனத்தில்படும்படி நன்றாக உரைக்க வல்லவன்; ஆதலால் பகவான் அவனுக்கும் திவ்யசக்ஷுஸ்ஸைக் கொடுத்து தன் விச்வரூபத்தைப் பார்க்கச் செய்தான். “அரசே! என்ன ஆச்சர்யம் இப்படி கண்ணன் சொன்ன உடனேயே தன் தோழனும் அத்தை மகனுமான அர்ஜுனனுக்குத் தன் விச்வ ரூபத்தைக் காட்டி அருளினான்” என்கிறான் ஸஞ்சயன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top