கேசவனுடைய இம்மொழியைக் கேட்டு க்ரீடம் தரித்த அர்ஜுனன் நடுங்கி கைகளைக் கூப்பி, நமஸ்கரித்து வணங்கி மீண்டும் தழுதழுத்த குரலுடன் பேசலானான்.
கிரீடம் தரித்த அரசன் எவருக்கும் வணங்க மாட்டான்; எவர்களைக் கண்டும் அஞ்சமாட்டான்; அப்படியிருக்க அர்ஜுனன் க்ருஷ்ணனுக்குத் தலைவணங்கி, கைகூப்பி தெண்டனிட்டு நாக்குழற பேசினான். இதனால் பகவான் முன்னிலையில் எவ்வளவு உயர்ந்தவனாகயிருந்தாலும், உடல் குறுகி, மனம் உருகி, கைகளைக் கூப்பி தெண்டனிட வேண்டும் என்பது வெளியாகிறது.