பகவத் கீதை

वायुर्यमोऽग्निर्वरुणः शशाङ्कः प्रजापतिस्त्वं प्रपितामहश्‍च ।
नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते ॥ ३९ ॥
வாயுர் யமோக்நிர் வருணச் சசாங்க: ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹச்ச |
நமோ நமஸ்தேஸ்து ஸஹஸ்ரக்ருத்வ: புநஸ்ச பூயோபி நமோ நமஸ்தே ||     11.39

வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், பிரஜாபதி, முப் பாட்டனார்,ஆகிய எல்லோரும் நீரே. உமக்கு பன்முறை நமஸ்காரம். ஆயிரம் தடவையும் இன்னும் மேலும் மேலும் உமக்கு நமஸ்காரங்கள் செய்கிறேன்.

தக்ஷப்ரஜாபதி முதலானோர் சேதனரை படைக்கின்றனர்; அவர்களைப் படைத்தவன் நான்முக ப்ரஹ்மா நமக்கு பிதாமஹன் (தாத்தா) ஆகிறார்; அந்த ப்ரஹ்மனைப் படைத்தவன் பகவான். நமக்கு ப்ரபிதாவாகிறான். வாயு, யமன், அக்னி, வருணன், ப்ரஜாபதி, நான்முகப் ப்ரஹ்மா இவர்களுக்கெல்லாம் அவன் ஆத்மாவாக யிருப்பதினாலே, அவர்களைச் சொல்லும் சொல் எல்லாம் உம்மையே குறிக்கும் என்பது பொருள்.

ஆச்சரியமான உருவத்தையுடைய அந்த பகவானை அன்பினால் துதித்து, பயத்தினால் அவனை வலம் வந்து நான்கு பக்கங்களிலும் நமஸ்கரித்தான் அர்ஜுனன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top