அர்ஜுன ! பரிசுத்த ஜீவன் இந்த அழுக்குடம்பில் இருந்தாலும், உற்பத்தி விநாஸமில்லாததினாலே, அவனுக்கு ஒருவித மாறுதலுமில்லை, உடலுக்கே ஸத்வ ரஜஸ் தமோ குணங்கள் உள்ளவை; இவை ஜீவனுக்கில்லை. ஆதலால் இந்த குணங்களடியாக ஏற்படும் செயல்களும் அவனைச் சேர்ந்தவையல்ல; உடலின் ஸ்வபாவம் (தன்மை) எதுவும் அவனை ஒட்டுவதில்லை.