பகவத் கீதை

निर्मानमोहा जिनसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः ।
द्वन्‍द्वैर्विमुक्‍ता: सुखदुःखसंज्ञै र्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ॥ १५.५ ॥

நிர்மாந மோஹா : ஜிதஸங்க தோஷா: அத்யாத்ம நித்யா : விநிவ்ருத்த காமா: |
த்வந்த்வைர் விமுத்தா : ஸுகதுக்க ஸமஜ்ஞை: கச்சந்த்யமூடா: பதம் அவ்யயம் தத் ||        15.5 ||

அஹங்கார மமகாரமும், அஜ்ஞானமும் நீங்கினவரே விஷயப் பற்று அற்றவர்; அவர்களே, பரமாத்மஜ்ஞான நிஷ்டர்; ஆசையை வென்றவர், இன்ப துன்பங்களைக் கடந்தவர், தெளிவான ஜ்ஞான முள்ளவர்; இப்படிப்பட்டவர்கள் பரிசுத்த ஜீவாத்ம தரிசனம் பெறுகிறார்கள்.

மேலே கூறியபடி என்னைச் சரணம் பற்றியவர், உடலே ஆத்மா என்கிற அஜ்ஞானம் நீங்கி, விஷயங்களில் ஆசையற்று ஆத்மஜ்ஞானம் பெற்று, அந்த ஜ்ஞானத்திலேயே நிலைத்திருப்பர். மற்ற எதிலும் அவர்களுக்கு ஆசையிராது, விஷயம் அருகிலிருந்தாலும் அதை அனுபவிக்க வேண்டுமென்ற இச்சையோ, அதில் தொடர்போ ஏற்படாது; இப்படியிருப்பதே புலனடக்கமாகும். அவர்கள் சுகம், துக்கம் இரண்டையும் சமமாகக் கருதி இருப்பர். என்னைச் சரணம் பற்றினவருக்கு, இந்த ஸ்வபாவமெல்லாம் தன்னடைவே உண்டாகும்; இவை ஆத்ம தரிசனத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கும்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top