எல்லா ஜீவராசிகளின் வயிற்றில் நான் ஜாடராக்னியாக யிருந்து, பிராண, அபான வாயுக்களுடன் கூடி, ஜீவன்கள் உட்கொள்ளும் நான்கு வித உணவை ஜீரணிக்கச் செய்கிறேன். (கடிப்பது, குடிப்பது, நக்குவது, உரிஞ்சுவது, என்ற நான்கு வித உணவு)
இவைகளை ஜீரணிக்கும் அக்னி நானே. பிராணவாயு உட்புகும் காற்று-அபானவாயு, வெளியேறும் காற்று ; மேல் நோக்கி வரும் பிராணவாயுவும், கீழ் நோக்கிச் செல்லும் அபான வாயுவும், ஓரிடத்தில் சேர்ந்து ஜாடராக்னியாகி அன்னத்தைப் பக்குவம் செய்கிறது; ஜீரணிக்கிறது.