ஸ்ரீ பகவான் உவாச: த்ரிவிதா பவதி ச்ரத்தா தேஹினாம் ஸா ஸ்வபாவஜா | ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ச்ருணு || 17.2
கண்ணன் கூறியது:-
சரீர சம்பந்தம் பெற்றவர்களுக்கு, உடன் பிறந்த முன் வினையின் ருசியினால், அவர்கள் செய்யும் செயல்களிலுள்ள ச்ரத்தையானது (ஊக்கமானது) ஸாத்வீக ராஜஸ தாமஸ்மென மூன்று விதமாக இருக்கும். அதனைச் சொல்லுகிறேன் கேள்.