பகவத் கீதை

பதினேழாம் அத்யாயம் - சிரத்தாத்ரய விபாகயோகம்

|| सप्तदशोऽध्यायः ॥
अर्जुन उवाच
ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयाऽन्विताः ।
तेषां निष्ठा तु का कृष्ण सत्तमाहो रजस्तमः ॥ १७.१ ॥

அர்ஜுன உவாச:-
யே சாஸ்த்ரவிதிம் உத்ஸ்ருஜ்ய யஜந்தே சரத்தயாந்விதா: |
தேஷாம் நிஷ்ட்டா து கா க்ருஷ்ண ஸத்வம் ஆஹோ ரஜஸ்தம: ||        17.1

பதினேழாம் அத்யாயம், அவதாரிகை:-

தெய்வப் பிறவி, அசுரப் பிறவி என இருவகைகளைக்கூறி, சாஸ்திரத்தை மீறி நடப்பதே அசுரப்பிறவிக்குக் காரணம். ஆதலால், சாஸ்திரத்துக்கு உட்பட்டே நடக்க வேண்டும் என்பதைக் கீழே சொன்னான்.

சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டுள்ள செயல்களும் ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்குச் சேர மூன்று விதங்களாயிருக்கும் என்பதையும், அவைகளின் தன்மையையும் இந்த அத்தியாயத்தில் கூறுகிறான்.

ஸ்லோகத்தின் பொருள் :-

அர்ஜுனன் சொன்னான்.

க்ருஷ்ணா? யார் சாஸ்திர விதியை மீறி, ஆனால் ச்ரத்தையுடன் யாகாதிகளைச் செய்கிறார்களோ, அவர்களுடைய நிலை எத்தகையது ; ஸத்துவமா, ராஜஸமா? அல்லது தாமஸமா ?

ச்ரத்தையுடனேயே ஒருவன் முன்னேற வேண்டுமென்கிற சாஸ்திரம் விதிக்காத ஒரு செயலையோ, யாகத்தையோ, யஜ்ஞத்தையோ செய்கிறான். இப்படிப்பட்டவனின் கதி என்ன? இவன் ஸத்வகுணமடியாக மேலேறுகிறானா? அல்லது ரஜஸ் தமஸ்ஸினால் கீழே அழுந்துகிறானா? சாஸ்திரம் விதித்துள்ளபடி செய்யவேண்டியது இன்றியமையாததா? என்பதே அர்ஜுனனின் கேள்விக் கருத்து.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top