கீதார்த்தசங்க்ரஹம் अशास्त्रमासुरं कृत्स्नं शास्त्रीयं गुणतः पृथक् । लक्षण शास्त्रसिद्धस्य त्रिधा सप्तदशोदितम् ।। २१ ॥ அஶாஸ்த்ரமாஸுரம் க்ருத்ஸ்நம் ஶாஸ்த்ரீயம் கு3ணத: ப்ருத2க் | லக்ஷணம் ஶாஸ்த்ரஶித்3த4ஸ்ய த்ரிதா4 ஸப்தத3 ஶோதி3தம் || 21 || க்ருத்ஸ்நம் அஶாஸ்த்ரம் சாஸ்திரத்தில் விதி4க்கப்படாத கர்மம் அனைத்தும் ஆஸுரம் அஸுரர்க்குரியது (ஆகையாலே பயனற்றது) (என்றும் ஶாஸ்த்ரீயம் சாஸ்திரத்தில் விதி4க்கப்பட்ட கர்மம் கு4ணத: (ஸத்வ ரஜஸ் தமோ) கு3ணங்கள் மூன்றையிட்டு ப்ருத2க் மூன்று விதமாய் இருப்பது (என்றும்) ஶாஸ்த்ர ஶித்3த4ஸ்ய சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட யாகம் முதலான கர்மங்களுக்கு த்ரிதா4 லக்ஷணம் “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள் (தாம் சேர்வதன் மூலம் அவற்றை மற்ற கர்மங்களினின்றும் வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன (என்னும் விஷயமும்) ஸப்தத3 ஶோதி3தம் பதினேழாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டது Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0