கீதார்த்தசங்க்ரஹம்

ஸ்ரீமத் பகவத்கீதா ஸார ஸங்க்ரஹம்

16. இந்த கீதா சாஸ்த்ரமானது அர்ஜுனனுக்கும் கண்ணபிரானுக்கும் ஸம்வாதரூபமாக அவதரித்திருக்கச்செய்தேயும் த்ருதராஷ்ட்ரனுக்கும் ஸஞ்ஜயனுக்கும் ஸம்வாதரூபமாகவும் அவதரித்ததாயிற்று. கீதை தொடங்கும்போதே "த்ருதராஷ்ட்ர உவாச” என்று அவன் பெயரைத்தான் நினைக்கவும் சொல்லவும் ப்ராப்தமாகிறது. த்ருதராஷ்ட்ரன் ஸஞ்ஜயனை நோக்கிக் கேட்க, குருக்ஷேத்ரத்தில் நடந்த செய்திகளை யெல்லாம் அவனுக்கு ஸஞ்ஜயன் சொல்லுவதாகவும், கீதாசாஸ்த்ரமும் ஸஞ்ஜயன் வாயிலாகவே வெளிவருவதாகவும் அமைந்திருக்கின்றது. பதினெட்டாமத்தியாயத்தில் எழுபத்து மூன்றாவது ச்லோகத்தோடு க்ருஷ்ணார்ஜுநஸம்வாதம் முடிந்து விட்டது. அதற்குமேலுள்ள ஐந்து ச்லோகங்களும் த்ருதராஷ்ட்ரனுக்கு ஸஞ்ஜயன் சொல்லி முடிப்பதாக அமைந்திருக்கின் ன்றன.

17. பாண்டவர்களும் கௌரவர்களுமாகிற இருவகுப்பினருடையவும் சேனைகள் போர்புரிய ஆயத்தமாயிருந்த வளவில் வேதவ்யாஸ பகவான் தன் புதல்வனான த்ருதராஷ்ட்ரனிடம் வந்து 'மன்னவனே ! இனி நடக்கப்போகிற யுத்தத்தில் உனது புத்திரர்கள் தவறாது விநாசமடையப் போகிறார்கள்; அந்த யுத்தத்தை நீ நேரில் காண விரும்புகின்றாயாகில் அதைக் காண்பதற்கீடான சக்ஷுஸ்ஸை உனக்கு அளிப்பேன்' என்றார். அதுகேட்ட த்ருதராஷ்ட்ரன் 'நான் அதைக் காண விரும்புகின்றிலேன்; உள்ளபடி அனைத்தையும் கேட்பிக்க வேணும்' என்றான். அப்போது வேத வ்யாஸர் தம்முடைய சிஷ்யனும் த்ருதராஷ்ட்ர ஸாரதியுமான ஸஞ்ஜயனை யழைத்து யுத்தவிஷயத்தில் அவன் ஸர்வஜ்ஞனாம்படி அநுக்ரஹம் செய்து, 'ஆதி யோடந்தமாக யுத்த விருத்தாந்தங்கள் முழுவதையும் த்ருதராஷ்ட்ரனுக்கு நீ சொல் லக் கடவாய்' என்று நியமித்து (வ்யாஸர்) தம் இருப்பிடம் சென்று சேர்ந்தார். பிறகு ஸஞ்ஜயன் யுத்தரங்கத்தில் வந்து, அர்ஜுநனுக்கு கீதோபதேசம் செய்தருளா நின்ற ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவின் முகாரவிந்தத்தில் நின்றும் கீதாம்ருதத்தை ஸாக்ஷாத்தாக ச்ரவணம் பண்ணி வியாஸருடைய அநுக்ரஹத்தினால் கிடைத்திருந்த திவ்யஜ்ஞானத்தாலே விவித விசித்ர விருத்தாந்தங்களெல்லாவற்றையும் தனக்கோர் அபாயமின்றிக்கே கரதலாமலகமாகக் கண்டுணர்ந்து அந்த யுத்தரங்கத்தில் நின்றும்போய் த்ருதராஷ்ட்ரனிடம் சேர்ந்து, யுத்தத்தைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த அவனுக்கு யுத்தச்செய்திகளை முதலே பிடித்துச் சொன்னான். ஆக இந்த ஸம்வாதம் கீதாசாஸ்த்ரமாக உலகில் பரவி அனைவரையும் புனிதமாக்கிக் கொண்டு வருகின்றது.

18. ஸ்ரீ க்ருஷ்ணபரமாத்மா வாஸ்தவமாகத் திருவவதாரம் செய்து, வாஸ்தவமான அர்த்தங்களை நிரப்பி வாஸ்தவமாக கீதாசாஸ்த்ரத்தை யவதரிப்பித்தருளினதாக ஸ்ரீ பகவத் ராமாநுஜனடியார்களான நாம் நம்பியிருக்கிறோம். ஸ்வாமி யிட்டருளின கீதாபாஷ்யத்தின் அவதாரிகையிலும் மேலே பல ச்லோகங்களின் பாஷ்யத்திலும் இந்த நம்பிக்கையே நமக்கு ஊர்ஜிதமாக்கப்படுகின்றது. ஸ்ரீமத் சங்கராசார்யஸ்வாமிகளியற்றிய பாஷ்யத்தின் ப்ரக்ரியை இதற்கு மாறாகவுள்ளது. அவர் தம்முடைய பாஷ்ய அவதாரிகையில் "பகவாந்... ஸ்வமாயயா தேஹவாநிவ ஜாத இவ ச லோகாநுக்ரஹம் குர்வந் லக்ஷ்யதே” என்றெழுதி வைத்திருக்கக் காண்கிறோம். இதனால், பகவான் உண்மையில் தேஹபரிக்ரஹம் செய்தருளவில்லை யென்றும், உண்மையான அவதாரம் செய்தருளவில்லையென்றும், மாயையினால் ஏதோ ஜனங்களை மயக்கிக் காட்டினதாகவும் சங்கராசாரியர் அபிப்ராயப் படுவதாக விளங்குகின்றது. இப்படி இவர் அபிப்ராயப்படுவதற்கு ஒரு காரணாபாஸ முண்டு; அதாவதென்னென்னில்; மேலே நான்காமத்யாயத்திலே பகவான் தானே தன்னுடைய அவதாரத்தைப்பற்றிப் பேசிவருகையில் (4-6) “அஜோபி ஸந்நவ்யயாத்மா பூதா நாமீச்வரோபி ஸந், ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா.” என்றதில் 'ஆத்ம மாயயா ஸம்பவாமி' என்றுள்ளது. இதற்கு உண்மையான பொருள் எதுவோ அது பகவத் ராமாநுஜ பாஷ்யத்தில் ப்ரமாண ப்ரதர்சந புரஸ்ஸரமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. "ஆத்மமாயயா-ஆத்மீயயா மாய்யா. 'மாயா வயுநம் ஜ்ஞானம்' இதி ஜ்ஞாநபர்யாயோத்ர மாயா சப்த: . ததா சாபியுக்தப்ரயோக: - 'மாயயா ஸததம் வேத்தி ப்ராணிநாஞ்ச சுபாசுபம்' இதி. ஆத்மீயேந ஜ்ஞாநேந ஆத்மஸங்கல்பேநேத்யர்த்த:." என்பன கீதாபாஷ்யத்தில் அங்கு ஸ்வாமியருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள். வைதிகநிகண்டுவையும் அதையநுஸரித்த அபியுக்த ப்ரயோகத்தையும் காட்டி ஸங்கல்பரூபஜ்ஞானமே ஸங்கல்பரூபஜ்ஞானமே இங்கு மாயாசப்தார்த்த மென்று ஸ்வாமி நிர்ணயித்திருக்கிறார். இதுதான் மஹர்ஷிகளின் அபிப்ராயத்திற்கு மிகவுமிணங்கிய ப்ராமாணிகமான பொருள். ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் (6-5-84) *இச்சாக்ருஹீதாபிமதோரு தேஹ: * என்று, மாயாசப்தஸ்தானத்தில் இச்சாசப்தத்தை நிஸ்ஸந்தேஹமாக இட்டு. பகவான் தன்னுடைய இச்சையினாலே தனக்கு அபிமதமான பல திவ்யமங்கல விக்ரஹங்களைப் பரிக்ரஹித்துக்கொண்டு அவதரிப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top