பகவத் கீதை வெண்பா கத்தாவா குந்தன்மை கன்மங்க ளாங்கவற்றி லொத்தாம் பலனசே ருலகுக்குத்-தத்துவமா நின்றவுயிர் தான்செய்யா னேர்நடக்கு மாறிதுதா னொன்றியமுன் வாதனையா லுற்று. 5.13 தத்துவுமா நின்ற உயிர் (கருமத்திற்கு வசப்படாத) சிறந்த தத்துவமாக நின்ற ஜீவஸ்வரூபம் உலகுக்கு விசித்ரமான ஜனஸமூஹத்திற்கு கத்தாவாகும் தன்மை கர்த்தாவாக (செயல்புரிபவனாக) இருக்கும் தன்மையையும் ஆங்கு கன்மங்கள் அவர்க்குரிய கர்மங்களையும் அவற்றில் சேர் ஒததாம் பலன் தேவர் முதலானார்க்குரிய கர்மபலன்களின் அநுபவத்தையும் தான் செய்யான் தான் இயல்வாகச் செய்வதில்லை இது தான் இக்கர்த்ருத்வம் முதலானவை ஒன்றிய முன் வாதனையால் உற்று நேர் நடக்குமாறு (ஜீவ னோடு) பொருந்தியிருக்கும் பூர்வவாஸனையாலே உண்டாகித் தொடர்ந்து நடந்து செல்லாநிற்கும் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0