பகவத் கீதை வெண்பா அந்த மயர்வை யறிவா னசிப்பித்துச் சிந்தை தெளிந்து சிறப்புடையோர் – தந்தமது பேரறிவு தானே. பகலவனிற் பீடுடைத்தாய் நேரறிவு காட்டு நிறத்து. 5.15 அந்த மயர்வை அந்த அஜ்ஞானஹேதுவான கர்மத்தை அறிவால் ஆத்மஜ்ஞானத்தால் நசிப்பித்து அழியச்செய்து சிந்தை தெளிந்து சிறப்புடையோர் தந்தமது மனத்தெளிவை அடைந்து சிறப்புற்றவர்களுடைய பேரறிவுதானே மிகப் பெரிதான அவ்வாத்மஜஞானமே பகலவனில் பீடு உடைத் தாய் சூரியனைப்போலே பெருமைபெற்றதாய் நேர் அறிவு காட்டும நிறத்து (எல்லா விஷயங்களைப்பற்றியும்) உண்மையான அறிவைக்காட்டும் தன்மையை உடையதாகும் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0