பகவத் கீதை வெண்பா கண்ட முனிவர் கடுவினையின் கட்டழிததுக் கொண்ட வுயிரிருமை கூர்ந்ததுயர்-விண்டறவே நெஞ்ச நிறீஇயுயிாககு நீடின்பம பூண்டவரே யெஞ்சாப் பரம்பெறுவ ரேய்ந்து. 5.24 உயிர் கொணட இருமை கூர்ந்த துயர் விண்டு ஆத்மாக்கள் அநுபவிக்கும் (சீதோஷ்ணம் முதலிய) இரட்டைத்துன்பங்களிலிருந்து விடுபட்டு நெஞ்சம் அறவே நிறீஇ மனத்தை நன்றாக (ஆத்மாவில) நிலைநிறுத்தி உயிர்க்கு எல்லா ஜீவராசிகளுக்கும் நீடு இன்பம் பூண்டவரே நிலையான இன்பத்தைத் தரும் ஹிதத்தில் ஈடுபட்டவர்களே கண்ட முனிவர் ஆத்மாவைக் காண்கின்றவர்களாய் கடுவினையின் கட்டு அழித்து ( ஆத்மாவை அடையத் தடையாயிருக்கும்) கொடிய வினைகளினின்றும் விடுபட்டு எஞ்சா பதம் அழியாத ஆத்மாநுபவத்தை ஏய்ந்து பெறுவர் பொருந்தி அடைவர் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0