பகவத் கீதை வெண்பா

இவ்வாறு காம வெகுளி யடக்கிமதி 
வெல்வாறு தாமனத்தை வென்றோருக்-கெவ்வாறு
மீளாது துய்க்கு மிகுபிரம வானந்த
நீளாகு மென்று நிகழ்ந்து.     5.25

இவ்வாறு

இவ்வண்ணமாக

காமவெகுளி அடக்கி

காமக்ரோதங்களை அடக்கி

மதி வெல்வாறு தாம்

புத்தியைப் (பிராகிருத விஷயங்களில் மேயாமல்) வெல்லும் வழியாலே

மனத்தை வென்றோருக்கு

மனத்தை (ஆத்மாவிலேயே ஈடுபடுத்தி) வென்றோருக்கு

எவ்வாறும் மீளாது துய்க்கும்

எந்த வழியிலும் முடிவில்லாது அநுபவிக்கும்

மிகு பிரம ஆனந்தம்

சிறந்த ஆத்மாநுபவஸுகம்

என்றும் நிகழ்ந்து

என்றும் ஏற்படுவதாய்

நீளாகும்

நீண்டு செல்லும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top