பகவத் கீதை வெண்பா

புறப்பற்றை நீக்கிப் புருவத்துட் கண்ணாற் 
சிறந்தொக்க மூச்சிருகாற் செல்ல – நிறுத்துமனப்
புந்தியான் வென்ற பயவெகுளி யானவனே
சிந்தையான் முத்தன் சிறந்து.     5.26

புறப்பற்றை நீக்கி

வெளிவிஷயத் தொடர்புகளை நீக்கி

புருவத்துள் கண்ணால் சிறந்து

கண்களாலே புருவங்களின் இடையே சிறப்புடன் தியானம்செய்து

இருகால் மூச்சு ஒக்க செல்ல சிறந்து

உள்ளேயும் வெளியேயும் செல்லும் இரு மூச்சுகள் ஸமமாகச் செல்லும்படி சிறந்த யோகாப்யாஸத்தைச் செய்து

நிறுத்தும் மனப்புந்தியான்

(வெளி விஷயங்களிற்செலலாமல்) அடக்கப்பட்ட மனம் முதலிய இந்திரியங்களையும் அறிவையும் உடையவனாய்

வென்ற பயவெகுளி ஆனவனே

(அதனாலேயே) பயக்ரோதங்களையும் ஜயித்தவனே

சிந்தையால் சிறந்து முத்தன்

மனத்தால் சிறப்படைந்து முக்தனாகவே (எப்போதும்) இருப்பவன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top