பகவத் கீதை வெண்பா

வேள்விதவங் கொள்வோனாய் மிக்கனைத்துந்தன்வசமா 
வாள்வினைய னாகி யனைத்துலகு -நீளுற்ற 
வெல்லா வுயிர்க்கு முறவா மெனையறிந்த
நல்லான் பெறுஞ்சா நதி நன்கு.     5.27

வேள்வி தவம் கொள்வோனாய்

யாகங்களையும் தவங்களையும் ஏற்றுக்கொள்பவனாய்

அனைத்து உலகும் தன் வசமா மிக்கு ஆள்வினையன் ஆகி

எல்லா உலகத்தையும் தன் வசப்படுத்திக்கொண்டு மிகவும் நியமிக்கும் தொழிலை உடையவனாக (ஸர்வலோகமஹேஸ்வரனாக) ஆகி

அனைத்து உலகு எல்லா உயிர்க்கும்

எல்லா உலகிலுமுள்ள எல்லா உயிர்களுக்கும்

நீள் உற்ற உறவாம்

அநாதி உறவினனான

எனை அறிந்த நல்லான்

என்னை அறிந்த நல்லவனே

நன்கு சாந்தி பெறும்

சாந்தியை நன்கு அடைவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top