பகவத் கீதை வெண்பா

எண்மதியன் றொல்லையா னெல்லா நியமிப்பா 
னுண்மைப் பொருளுக்கு நுண்ணியான் – திண்மை
யுலகளிப்பா னுன்னரியா னோங்கிரவி வண்ணன்
இலகுமந்தத் துப்பரனை மிக்கு .      8.9

எண்மதியன்

எல்லாவற்றையும் அறிபவனும்

தொல்லையான்

பழையவனும்

எல்லாம் நியமிப்போன்

எல்லாவுலகையும் நியமிப்பவனும்

உண்மைப் பொருளுக்கு நுண்ணியான்

மாறுபாடற்ற அணுப்பொருளான ஜீவனைக் காட்டிலும் அணுவாயிருப்பவனும்

உலகு திண்மை அளிப்பான்

எல்லாவுலகையும் திடமாகப் படைப்பவனும்

உன்னரியான்

நினைக்க அரிய ஸ்வரூபத்தை உடையவனும்

ஓங்கு இரவி வண்ணன்

ஒளிமிக்க சூரியன் போன்ற ஒளி யுடையவனும்

அந்தத்து பரனை

அந்த தமஸ்ஸான ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டவனுமான பரமபுருஷனை

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top