பகவத் கீதை வெண்பா இந்த உடலினைவிட் டேகுங்காற் றான்சலியாச் சிந்தையுறு பத்தி திகழ்யோகம் – முந்துற்றே வாயுவினைத் தன்புருவ மத்தியத்தில் வைத்துணர்வான் சேயுயரு மப்பரனைச் சேர்ந்து. 8.10 இந்த உடலினை விட்டு ஏகுங்கால் இந்த உடலை விட்டுச்செல்லும் அந்திமகாலத்தில் உறு பத்தி திகழ் யோகம் முந்துற்றே பக்தியோடும் யோக பாலத்தோடும் சேர்ந்து தான் சலியா சிந்தை தாழ்ந்த விஷயங்களில் செல்லாமலிருக்கும் நெஞ்சினால் வாயுவினை ப்ராணனை தன் புருவ மத்தியில் வைத்து தன்னுடைய புருவங்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தி உணர்வான் (முற்கூறிய பரமபுருஷனை அங்கு) தியானிப்பவன் சேய் உயரும் அப்பரனை மிக உயர்ந்த அப்பரமபுருஷனை சேர்ந்து அடைந்து மிக்கு இலகும் மிகவும் விளங்குவான் (அவனை ஒத்த செல்வத்தை உடையவனாவான் என்றபடி) Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0