பகவத் கீதை வெண்பா அக்கரமா யாதொன்றை யாய்ந்தமறை யோருரைப்பர் செக்கநசை யார்யாதைச் சென்றடைவர் – மிக்கதுற வேய்ந்தியவ ரிச்சித்தார் யாதையுனக் குச்சுருங்க வாய்ந்துரைப்ப னப்பதத்தை மற்று. 8.11 யாதொன்றை எதை அக்கரமாய் அக்ஷரமாக ஆய்ந்த மறையோர் உரைப்பர் வேதத்தை ஆராய்ந்தவர்கள் சொல்லுகிறார்களோ செக்க நசையார் இயவர் ஆசையை அறுத்த எவர்கள் யாதை இச்சித்தார் எதைப் பெற விரும்பி மிக்க துறவு ஏய்ந்து மிகுந்த ப்ரஹ்மசர்யத்தை அநுஷ்டித்து யாதைச் சென்று அடைவர் எதைச் சென்று அடைவார்களோ மற்று அப்பதத்தை (உபாஸிக்கத்தக்கதான) அந்த என்னுடைய அக்ஷரஸ்வரூபத்தை உனக்கு சுருங்க ஆய்ந்து உரைப்பன் ஆராய்ந்து உனக்குச் சுருக்கமாகச் சொல்லுவேன் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0