பகவத் கீதை வெண்பா பொறிவாச லெல்லா மடைத்தகவாய்ப் புந்தி நெறியாக்கி மீது நிறுத்திச் – செறியோக னோங்காரஞ் செப்பியெனை யுன்னி யுடலொழித்துப் போங்காற் பரமகதி போம். 8.12 பொறி வாசல் எல்லாம் (அறிவு வெளிப்படும்) வாசல்களாயிருக்கும் ஞானேந்திரியங்கள் அனைத்தையும் அடைத்து ( தமது தொழிலைச் செய்யாதபடி) அடக்கி புந்தி மனத்தை அகவாய் ஹ்ருதய கமலத்திலிருக்கும் அக்ஷரபுருஷனான என்னிடத்திலே நெறியாக்கி ஈடு படுத்தி செறி யோகன் (என்னிடத்தில் அசையாத நிலையை அடைந்தவனாய் ஓங்காரம் செப்பி (என்னைச் சொல்லும்) ப்ரணவமாகிற ஓரெழுத்தைச் சொல்லி எனை உன்னி ( அதன் பொருளான ) என்னை அநுஸந்தித்து மீது நிறுத்தி (தனது ப்ராணவாயுவைத் ) தலையிலே (மூர்த்தன்ய நாடி வழியாகப்) புகச்செய்து உடல் ஒழித்து போங்கால் உடலை விட்டுப்போகும் ஸமயத்தில் பரமகதிபோம் (முற்கூறிய கைவல்யார்த்தி) ஸம்ஸாரமண்டலத்திற்குத் திரும்பி வருதலில்லாததாகையாலே மிகச்சிறந்த ப்ராப்யமான ப்ரக்ருதிவியுக்தமான தன் ஆத்மஸ்வரூபத்தை அடைவான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0