பகவத் கீதை வெண்பா

செல்வமுயி ரின்பத்துச் செல்லாத நெஞ்சனாய் 
நல்விரகா லென்னினைந்து நாடோறும் – தொல்வகையா
லென்றுமெனைக் கூடு மியோகிக்குப் பார்த்தனே
நன்று பெறவெளிய னான்.      8.13

பார்த்தனே!

குந்தீபுத்திரனே!

செல்வம் உயிரின்பத்துச் செல்லாத நெஞ்சனாய்

ஐஸ்வர்யம் கைவல்யம் ஆகியவற்றில் நெஞ்சு செலுத்தாதவனாய்

நாள்தோறும்

உபாஸநகாலம் தொடங்கி எப்போதும்

நல்விரகால் என்னினைந்து

மிக இனியவனாக என்னை நினைத்து

தொல்வகையால்

பக்தியோகமாகிற அநாதி மார்க்கத்தால்

என்றும் எனைக் கூடும் இயோகிக்கு

எப்போதும் என்னோடு சேர நினைக்கும் உபாஸகனுக்கு

நான்

நான்

பெற நன்று எளியன்

அடைவதற்கு மிக எளியவனாயிருக்கிறேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top