பகவத் கீதை வெண்பா பற்றாய்ப் பரிப்பவனாய்ப் பாங்கிறையாய்ப் பார்ப்பவனாய் மற்றாங் கிருப்பிடமாய் வன்சரணாய் – உற்றானாய் தோற்றமுடி வுக்கிடமாய்ச் சூழ்நிதியாய் வீயாத வேற்றமுடை வித்தாவேன் யான் . 9.18 (இவ்வுலகினர்க்கு) பற்றாய அடையுமிடமாகவும் பரிபவனாய் தரிக்கும் சேதனராகவும் பாங்கு இறையாய நியமிக்கும் சேதனராகவும் பார்ப்பவனாய நேரே காணும் சேதனராகவும் மற்று ஆங்கு இருப்பிடமாய் மேலும் அங்கங்கு உள்ள வஸிக்குமிடங்களாகவும் வன் சரணாய இஷ்டத்தை அளித்து அனிஷ்டத்தைத் தவிர்க்கும் சேதனராகவும் உற்றானாய் நன்மையை விரும்பும் சேதனராகவும சூழ் நிதியாய் (இவ்வுலகிலிருந்து) தோன்றி (அதில்) ஒடுங்கும் பொருள்களாகவும் வீயாத ஏற்றமுடை வித்தாவேன் (இவ்வுலகிற்கு) மாறாமலிருக்கும் சிறப்புடைய காரணமாகவுமிருப்பவன் யான் நானே Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0