பகவத் கீதை வெண்பா இந்தவுல குக்குநா னேலும் பிதாவாவன் பந்தநிகழ் மாதா பயில்விதாதா—முந்தையுமாம் பாட்டனறி தன்மை பவித்திரநல் லோங்கார மீட்டமுறும் வேதங்கள் யான் . 9.17 இந்த உலகுக்கு இந்த ஜீவராஸிகளுக்கு நான் நான் ஏலும் பிதா ஆவன் ஹிதத்தைச் செய்யும் பிதாவாயிருக்கிறேன் பந்தம் நிகழ மாதா அன்புடைய தாயாகவும இருக்கிறேன் பயில் விதாதா உண்டாக உதவும் (மற்ற) சேதநனாகவும் இருக்கிறேன் அறிதன்மை பவித்திரம் (இந்த ஜீவராஸிகளுக்கு) வேதத்திலிருந்து அறியத்தக்க பாவனப்பொருளாகவும் நல் ஓங்காரம் அறிவையளிக்கும் ஓங்காரமாகவும் ஈட்டமுறும் வேதங்கள் ருக்யஜுஸ்ஸாமங்கள் என்று மூன்று வகைப்பட்ட வேதங்களாகவும் இருப்பவன் யான் நானே Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0