பகவத் கீதை வெண்பா

நான்கிருது நான்வேளவி நான்சுவதை நான்மருந்து 
நான்கருது மந்திரநெய் நான்றானே-நான்கனலு
மங்கி யதுவு மதிற்சிறந்த வோமமுமாய்
தங்கியது மைவென்ன நான் .       9.16

நான் கிருது

(ஜ்யோதிஷ்டோமம் முதலான) யாகங்களும் நானே

நான் வேளவி

(அவற்றுக்கு அங்கமான) ஐந்து மஹாயஜ்ஞங்களும் நானே

நான் சுவதை

(பிதருக்களுக்குப் புஷ்டியளிக்கும) ஸவதா பிண்ட ஸபதங்கள் நானே 

நான் மருந்து

ஓஷதி விகாரமான ஹவிஸ்ஸும் நானே

நான் கருதும் மந்திரம்

(யஜமானன்) நினைத்து உச்சரிக்கும் மந்திரமும் நானே

நெய் நான் தானே

நெய்யாகிற ஹவிஸ்ஸும நானேயாவேன

நான் கனலும அங்கி அதுவும்

(ஆஹவனீயம் கார்ஹபதயம் தக்ஷிணாகநி என்று) ப்ரஸித்தி பெற்ற மூன்று வகைப்பட்ட எரியும அக்நியும் நானே

அதில் சிறந்த ஓமமுமாய தங்கியதும்

அந்த அக்நியில் ஹவிஸ்ஸை இடுதலாகிற சிறந்த ஹோமமாய் இருப்பதும்

மெய் வண்ணன் நான்

(இவையனைத்தையும்) மெய்யான ப்ரகாரமாகக் கொண்டிருக்கும் நானே 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top