பகவத் கீதை வெண்பா சீரரசிங் கெம்மரத்துந் தெய்வ முனிவர்களிற்பேரறிவ னாரதனும் பேசினான் – றாரமருங்கந்திருவர்க் காவலனான் கணணார் கபிலமுனிமுந்தியலுஞ் சித்தர்க்கு முன். 10.27 இங்கு எம்மரத்தும் இவ்வுலகிலுள்ள எல்லா மரத்துள்ளும், சீர் அரசு சிறப்புற்ற அரசமரமாகிறேன், பேசில் பேசப்புக்கால், தெய்வமுனிவர்களில் தேவரிஷிகளில், பேர் அறிவன் நாரதனும் பேரறிவாளனான நாரதனும் நான் நானே, தார் அமரும் கந்திருவர் காவலன் நான் மாலை தரித்த கந்தர்வராஜாவான சித்ரரதன் நானே, முந்து இயலும் சித்தர்க்கு பழையவர்களான ஸித்த புருஷர்களுக்குள், முன் கண் ஆர் கபிலமுனி நான் முற்பட்டவராய், அறிவு நிறைந்தவரான கபிலமுனி நானே. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0