பகவத் கீதை வெண்பா மாமுனிவர் தம்மிற் பிருகுநான் வண்சொற்கு ளோமென்று சொல்லுமோ ரக்கரநான் – சேமமுறு மெச்சங்க ளிற்செபமா மெச்சமா னிற்பவற்று ளுச்சந் திகழிமவா னுற்று. 10.26 மாமுனிவர் தம்மில் மஹரிஷிகளுக்குள் பிருகு நான் நான் ப்ருகுவாகிறேன் வண் சொற்குள் பொருளுடைய சொற்களுக்குள் ஓம் என்று சொல்லும் ஓர் அக்கரம் நான் ஓம் என்று சொல்லப்படும் (சிறந்ததான) ஒற்றை எழுத்து நானே சேமம் உறும் எச்சங்களில் லோக க்ஷேமத்தைச் செய்யும் யஜ்ஞங்களில் செபமாம் எச்சம் நான் ஜபயஜ்ஞமும் நானே உற்று நிற்பவற்றுள் நிலையாயிருக்கும் ஸாமாநய மலைகளுக்குள் உச்சம் திகழ் இமவான் (நான்) உயர்வு பெற்றிருக்கும் இமவான் நானே Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0