பகவத் கீதை வெண்பா

முற்றும் புரோகிதர்க்குள் முன்னாம்பிர கற்பதியென்
றுற்று விசயா வுணரென்னை – மற்றுத்தான்
சேனைத் தலைவரிற் சீர்க்கந்தன் சாகரநான்
ஏனைப் புனற்றடங்கட் கிங்கு.       10.25

விசயா

விஜயனே!

முற்றும் புரோகிதர்க்குள்

அறிவால் நிறைந்த புரோஹிதர்களுக்குள்

முன்னாம் பிரகற்பதி என்று

முக்கியமானவனான பருஹஸ்பதி என்று,

என்னை உற்று உணர்

என்னை நன்கு அறிவாய்,

மற்றுத்தான்

மேலும்,

சேனைத்தலைவரில்

ஸேனைத்தலைவர்களுக்குள்,

சீர்க்கந்தன் (நான்)

சிறப்புற்ற முருகன் நானே,

ஏனை

மேலும்,

இங்கு

இவ்வுலகில்,

புனல் தடங்கட்கு

குளங்களுக்குள்,

சாகரம் நான்

சிறப்புற்ற கடலும் நானே.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top