பகவத் கீதை வெண்பா வல்லா யுதங்களில் வச்சிரநான் வண்கோவி லெல்லாஞ் சுரக்கு மெழிற்கோநான் – சொல்லாருமுற்பத்திக் கந்தற் பனுநா னுயர்காளச்சற்பத்தில் வாசுகிநான் றான். 10.29 வல் ஆயுதங்களில் வலிமைமிக்க ஆயுதங்களில் நான் வச்சிரம நான் வஜ்ராயுதமாகிறேன் வண் கோவில் வண்மைமிக்க பசுக்களில் எல்லாம் சுரக்கும் கேட்டதையெல்லாம் கொடுக்கும் எழில் கோ நான் அழகிய காமதேநு நானே சொல் ஆரும் உற்பத்தி அனைவராலும் புகழப்படும் ப்ரஜோத்பத்தியைச் செய்யும் கந்தற்பனும் நான் மன்மதனும் நானே உயர் காளச் சற்பத்தில் உயர்வுடைய (ஒருதலை) காலசர்ப்பங்களில் வாசுகி வாசுகி என்னும் பாம்பு நான் தான் நானே Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0