பகவத் கீதை வெண்பா தைத்தியரிற் பொன்னன் புதல்வனான றன்னியத்திற் கோத்தியலுங் காலனாங் கூற்றுவனான் – பார்த்தியலும் சிங்கநான் சேர மிருகத்திற் செல்பறவைக் கங்கருடன் றானுநா னங்கு. 10.31 தைத்தியரில் அஸுரர்களுக்குள் பொன்னன் புதல்வன் நான் ஹிரண்யன் பிள்ளையாகிற ப்ரஹலாதன் நான் தன் இயத்தில் தன் இதயத்தில் கோத்து இயலும் (மரண காலத்தை) எண்ணிக்கொண்டிருந்து செயல்புரியும் காலனாம் கூற்றுவன் நான் மரணத்தை விளைக்கும் காலன் நான் மிருகத்தில் விலங்குகளுக்குள் சேர அனைத்தையும் பார்த்து இயலும் (தனக்கு அடங்கியதாக) எண்ணித் தொழில்புரியும் சிங்கம் நான் சிங்கம் நானே அங்கு செல் பறவைக்கு ஆகாசத்தில் பறக்கும் பறவைகளுக்குள் அம் கருடன் தானும் நான் அழகிய கருடனாயிருப்பவனும் நானே Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0