பகவத் கீதை வெண்பா சந்தமா ரக்சரங்கட் சார வகாரநான் தொந்தநான் சொற்சேர்த்திச் சொல்லிடத்தி – லந்தமிலாக் காலமுநான் றானே கலைசேர் சதுமுகனாய் மேலவனாந் தாதாநான் மிக்கு. 10.34 சந்தம் ஆர் அககரங்கள் வேதத்திலே பெருமை பெற்ற எழுத்துக்களுக்குள், சார அகாரம் நான் (அவற்றுக்கு மூல காரணமாகையாலே) ஸாரமான அகாரம் நானே, சொற்சேர்த்திச் சொல்லிடத்தில் சொற்களின் சேர்த்தியைச் சொல்லும் ஸமாஸங்களுக்குள், தொந்தம் த்வந்த்வ ஸமாஸம், நான் நானே, அந்தம் இலா அழிவில்லாத, காலமும் காலமும், நான் தானே நானேயாவேன், சதுமுகனாய நாலு முகத்தையுடையவனாய, மிக்கு மேல் அவனாம் (ஜீவர்கள் அனைவர்க்குள்ளும்) மிக உயர்ந்தவனான, கலை சேர் ஸரஸ்வதியோடு கூடிய, தாதா படைப்புக்கடவுள், நான் நானே. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0