பகவத் கீதை வெண்பா

பூத மவைபிறந்து போகும் வகையுன்பா
லேத மறவிரிப்ப யான்கேட்டேன் – மீதறிந்தேன்
இங்களவி லுன்பெருமை யேதுமொழி யாமனான்
செங்கமலக் கண்ணா தெளிந்து.     11.3

செங்கமலக்கண்ணா

செந்தாமரைக்கணணனே!

உன் பால்

(பரமாத்மாவான) உன்னிடமிருந்தே,

பூதமவை பிறந்து போகும் வகை

எல்லாப் பொருள்களும் உத்பத்தி லயத்தையும் அடையும் வழியை,

ஏதம் அற விரிப்ப

குறைவில்லாமல் (நீயே) கூற,

யான் கேட்டேன்

நான் கேட்டேன்,

இங்கு

இப்போர்க்களத்தில்,

அளவில் உன் பெருமை

உன்னுடைய அளவற்ற பெருமைகளை,

ஏதும் ஒழியாமல்

ஒன்றுவிடாமல்,

தெளிந்து

தெளிவாக,

நான்

நான்,

மீது அறிந்தேன்

மிகவும் அறியப்பெற்றேன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top