பகவத் கீதை வெண்பா இத்தகவு பார்த்த னியம்ப விறையுரைத்தான்மெயத்தகவில் காலன் மிகுந்துலகை – யொத்தொழிக்கலுற்றே னுனையொழிந்திங் கொன்னலராய் நின்றார்கள்மற்றாரு முய்யார் மடிந்து. 11.33 இத்தகவு பார்த்தன் இயம்ப இவ்வண்ணமாக அர்ஜுனன் கூற இறை ஸர்வேஶ்வரனான கண்ணன் உரைத்தான் (பின்வருமாறு) கூறலுற்றான். மெய்த் தகவில் காலன் உண்மையிலேயே (கொடியவர்களின ஆயுள் முடிவைக் கணக்கிடும்) கருணையற்ற காலன் நான் உலகை ஒத்து இந்த ராஜலோகத்திலுள்ள அனைவரையும் மிகுந்து விஶ்வரூபமெடுத்து வளர்ந்து ஒழிக்கல் உற்றேன் அழிக்க முற்பட்டிருக்கிறேன் இங்கு இப்போர்க்களத்தில் ஒன்னலராய நின்றார்கள் மற்று ஆரும் (உனக்கு) எதிரிகளாய் நின்றவர்கள் அனைவரும் உனை ஒழிந்து நீ இல்லா விடிலும் மடிந்து (எனது ஸங்கற்பத்தாலேயே) அழிந்து, உய்யார் உயிர் வாழாமல் போவார்கள். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0