பகவத் கீதை வெண்பா

தாராரு மந்தத் தனஞ்சயன்றான் சாலவியந்
தேரா ருடன்மயிர்க்கோ ளெய்தியே – சீரார்
முடியாற் பணிந்திறையை முன்றொழுது நின்றிப்
படியா லுரைசெய்தான் பார்த்து.    11.15

தார் ஆரும் அந்த தனஞ்சயன் தான்

(அரசர்க்குரிய) மாலையை தரித்திருந்த அந்த அர்ஜுநன்,

சால வியந்து

மிகவும் வியப்புற்று,

ஏரார் உடல் மயிரக்கோள் எய்தியே

(தனது) சிறந்த உடலில் மயிர்க்கூச்செறியப் பெற்றவனாய்,

இறையை

இறைவனான கண்ணனை,

சீரார் முடியால் பணிந்து

பெருமைமிக்க முடிதரித்த தனது தலையாலே வணங்கி,

முன் தொழுது நின்று

(கண்ணனுக்கு) முன்னால் கைகூப்பி நின்று,

பார்த்து

அக்கண்ணனைக் குறித்து,

இப்படியால் உரை செய்தான்

இவ்வண்ணமாகப் பேசத் தொடங்கினான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top