பகவத் கீதை வெண்பா

ஆற்றின் புனல்வேக மாழியிடை நோக்கிப்போ
யூற்றத் தடையுமா றொக்குமே – சீற்றத்துத்
தீயமரு நின்முகங்கள் சென்றுலக வீரரெல்லாம்
போயடையு மாறு புகுந்து.         11.29

சீற்றத்து

கோபத்தினாலே

தீ அமரும் நின் முகங்கள்

கொழுந்துவிட்டு எரியும் உனது முகங்களை

போய்ச்சென்று புகுந்து

போயடைந்து அவற்றினுள் புகுந்து

உலக வீரர் எல்லாம்

ராஜலோகவீரர்கள் அனைவரும்

அடையுமாறு

அடைகின்ற தன்மை

ஆற்றின் புனல் வேகம்

ஆறுகளின் நீர்ப்பெருக்குகள்

ஆழியிடை நோக்கிப் போய்

கடலைக் குறித்துச்சென்று

ஊற்றத்து அடையுமாறு ஒக்குமே

வேகமாக சேரும் தன்மையை ஒத்திருக்கும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top