பகவத் கீதை வெண்பா நீண்முடியுந் தண்டுடனே நேமியுஞ்சே ருன்னை நான்காணலுற்றிங் கப்படியே காதலிப்பன் – பூண்மருவுமந்நான்கு தோளுருவோ டாயிரந்தோ ளவ்வுருவாமன்னா நீ மன்னு மகிழ்ந்து. 11.47 ஆயிரம் தோள் அவ்வுருவா! கணக்கற்ற தோள்களையுடைய விஶ்வரூபத்தையுடையவனே! மன்னா! (உலகனைத்துக்கும்) அரசனே! அப்படியே முன்னையவண்ணமே நீள் முடியும் ஒரே நீண்ட முடியும் தண்டுடனே கதையோடு நேமியும் சேர் சக்கரமும் சேர்ந்துள்ள (திருக்கைகளையுடைய) உன்னை நான் உன்னை நான் இங்கு காணல் உற்று இவ்விடத்திலேயே காணவிரும்பி காதலிப்பன் அன்பு பூண்டிருப்பேன் பூண் மருவும் அந்நான்கு தோள் உருவோடு ஆபரணங்கள் அணிந்த அந்த நான்கு தோள்களையுடைய திருமேனியோடு நீ மகிழ்ந்து மன்னு நீ உகப்புடன் காட்சி அளிப்பாய் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0