பகவத் கீதை வெண்பா

முன்காணா வவ்வடிவை முற்றுங்கண் டுற்றுகப்ப
னின்காத லுண்ணடுங்கு மென்பயத்தா – னன்கார
மேவல் வடிவினையே மீண்டெனக்குக் காட்டியரு
டேவே சகத்திருப்பே சேர்ந்து.   11.46

தேவே!

பரமகாருணிகனே!

சகத்திருப்பே!

அனைத்துலகுக்கும் ஆதாரமாயிருப்பவனே!

முன் காணா அவ்வடிவை

இதுவரையில் காணப்படாத அந்த விஶ்வரூபத்தை

முற்றும் கண்டு

முழுவதும் கண்டு

நின் காதல் உற்று

உன்னிடம் அன்பு பூண்டு

உகப்பன்

ஆனந்தம் அடைவேன்

பயத்தால்

(கடுமையான உருவத்தைக் கண்ட) பயத்தாலே

என் உள் நடுங்கும்

எனது நெஞ்சு நடுக்கத்தை அடையும்,

மேவல் வடிவினையே

(விஶ்வரூபத்தை எடுத்துக்கொள்வதற்கு முன்) பொருந்தியிருந்த அழகிய வடிவையே

மீண்டு சேர்ந்து

மறுபடியும் அடைந்து

எனக்கு நன்கு ஆர காட்டி அருள்

எனக்கு நன்றாகவும் பரிபூரணமாகவும் காட்டியருள்வாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top