பகவத் கீதை வெண்பா ஆதலா னின்வணங்கி யாங்குடலந் தானொடுக்கிமீதுகப்பிப் பானிரப்பன் மேலிறையா – வோதுமுனைத்தாதை மகற்குச் சகிசகிக்கன் பற்கன்பன்போது நலம்போற் பொறு. 11.45 ஆதலால் முற்கூறிய காரணத்தால் மேல் இறையா ஓதும் உனை அனைவரையும் நியமிக்கும் மேலான இறைவனாக வேதங்கள் ஓதும் உன்னை மீது உகப்பிப்பான் மிகவும் உகக்கச் செய்வதற்காக நின் வணங்கி உன்னை வணங்கி ஆங்கு வணங்கியவுடன் உடலம் தான் ஒடுக்கி உடம்பை ஒடுக்கிக்கொண்டு இரப்பன் யாசிப்பேன் தாதை மகற்கு போல் தந்தை மகனின் குற்றத்தைப் போலவும் சகி சகிக்கு போல் தோழன் தோழனுடைய குற்றத்தைப் போலவும் அன்பன் என்னிடம் அன்புடைய நீ அன்பற்கு உன்னிடம் அன்புடைய என் குற்றத்தை போது நலம் மிக்க கருணையால் பொறு பொறுத்தருள்வாய் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0