பகவத் கீதை வெண்பா ஈதுரைக்கப் பார்த்த னிறையுரைத்தா னென்னுகப்பான்மீதுனக்குக் காட்டினேன் மேலுருவந் – தீதிலொளிசேரனந்த மாதியாஞ் சீருருவை நின்றொழிந்தாராரிதனைக் காண்பா ரமர்ந்து. 11.48 பார்த்தன் ஈது உரைக்க அர்ஜுனன் இதைச்சொல்ல இறை உரைத்தான் கண்ணன் கூறலுற்றான் மேல் மீதுருவம் மேலான விஸ்வரூபத்தை என்னுடைய உகப்பால் என்னுடைய உகப்பாலே உனக்கு காட்டினேன் உனக்குக் காண்பித்தேன் தீதில் ஒளிசேர் அனந்தம் ஆதியாம் சீர் உருவை இதனை குற்றமற்ற ஒளியையுடையதும், அளவற்றதும், (என்னையொழிந்த அனைத்துக்கும்) ஆதியாயிருப்பதுமான பெருமைபெற்ற இவ்வுருவை நின்னொழிந்தார் ஆர் உன்னைத்தவிர வேறு எவர் அமர்ந்து காண்பார் நன்றாகக் காணமுடியும் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0