பகவத் கீதை வெண்பா என்றுமுனைக் கூடநினைந் திவ்வாறு பத்தராய் நின்றுமிகச் சேவிப்பார் நேர்நுண்மை – யென்றுமுயிர் தன்னடைவார் தம்மிலெவர் தானதிக யோகியரென் றுன்னவுரைத் தான்விசய னுற்று. 12.1 ''என்றும் உனை கூட நினைந்து எப்போதும் உன்னோடு கூடியிருக்க எண்ணி இவ்வாறு பத்தராய் நின்று முன் ஸ்லோகத்தில் சொன்னபடியே பக்தியோகத்தில் ஊற்றமுடையவராய் நின்று மிக (உனை) சேவிப்பார் உன்னைப் பரிபூரணமாக உபாஸிப்பவர்களும் நேர் நுண்மை உயிர் மிகவும் நுண்ணியதான ஜீவாத்மாவை (உபாஸித்து) என்றும் தன் அடைவார் என்றும் தன் ஆத்மாவையே அடைபவர்களும் தம்மில் ஆகிய இருவரில் எவர்தான் அதிக யோகியா எவர் தன் பலனை விரைவில் பெறுபவர்கள்?" என்று உனை என்று அறிய விசயன் அர்ஜுனன் உற்று கண்ணனை அணுகி உரைத்தான் கேட்டான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0