பகவத் கீதை வெண்பா

பதின்மூன்றாமத்தியாயத்தின் பொருள்

ஈங்கு முதலாகி யேய்ந்தபதின் மூன்றாமோத்
தாங்குடல மாருயி ராப்புறுத-னீங்குநெறி
தன்மையுடன் மற்றுந் தகைமைபெறச் சோதித்து
நன்மையுடன் சொல்லு நயந்து   13.0B

ஈங்கு

இந்த கடைசி ஷட்கத்தில்

முதல் ஆகி ஏய்ந்த பதின்மூன்றாம் ஓத்து

முதலாவதாகப் பொருந்தியிருக்கும் பதின்மூன்றாம் அத்தியாயம்

ஆங்கு

இந்த ஸம்ஸாரத்தில்

ஆர் உயிர் உடலம் ஆப்பு உறுதல்

ஜீவாத்மாவானது உடலிலே கட்டுப்படுவதையும்

நீங்கு நெறி

அதிலிருந்து விடுபட வழியையும்

தன்மையுடன்

அந்த தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்தோடு

மற்றும் தகைமை பெற

மற்றுமுள்ள ஸ்வபாவங்களையும்

சோதித்து

ஆராய்ந்து

நன்மையுடன் நயந்து சொல்லும்

சிறப்பாக விருப்பத்தோடு கூறும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top