பகவத் கீதை வெண்பா

என்பா லனன்னியமா யேய்ந்துபுறம் போகாத
வன்பாரும் பத்தி யமர்வுறுத – லின்பார்
தனியிடத்திற் சார்தல் சனங்குழுவு கண்டால்
நனியுகப்புச் சேரா நலம்.      13.10

என்பால்

ஸர்வேஸ்வரனான என்னிடத்தில்

அனன்னியமாய் ஏய்ந்து

வேறு எவரிடமும் ஈடுபடாமல் இருக்கையாலே

புறம்போகாத

எனக்கே அற்றுத்தீர்ந்த

வன்பு ஆரும் பத்தி

நிலையாயிருக்கும் பக்தியை

அமர்வுறுதல்

உடையவனாதல்

இன்பு ஆர் தனி இடத்தில் சார்தல்

இனிமை நிறைந்த தனியான இடத்தில் வாழ்தல்

சனம் குழுவு கண்டால்

ஜனக்கூட்டத்தைப் பார்த்தால்

நனி உகப்பு சேரா நலம்

மிகவும் ஈடுபாடுகொள்ளாமல் இருக்கும் நன்மையை உடையவனாதல்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top