பகவத் கீதை வெண்பா

மிக்க பிரமம் விறல்யோனி யென்றுரைக்கத்
தக்க தெனத்சித்திற் சார்வுபெறத் – தொக்கவுயிர்
கெற்பத்தை யான்சேர்ப்பன் கேழ்கிளரும் பூதங்க
ளுற்பத்தி சேருமிதி லுற்று.           14 . 3

மிக்க பிரமம்

பெரிதான ப்ரஹ்மம்

விறல் யோனி

உலகனைத்துக்கும் காரணம்

என்று உரைக்கத்தக்கது

என்று சொல்லத்தக்கதாய்

எனது அசித்தில்

என்னுடையதான அசேதன மூலப்ரக்ருதியில்

சார்வுபெற

பொருந்தியிருக்கும்படி

தொக்க உயிர் கெற்பத்தை

சேதன ஸமஷ்டி ரூபமான கர்ப்பத்தை

யான்

நான்

சேர்ப்பன்

சேரச் செய்கிறேன்

இதில் உற்று

இந்தச் சேர்த்தியினால்

கேழ் கிளரும்

பிரமன் முதல் புல் ஈறாகப் பலவகையாகப் படரும்

பூதங்கள் உற்பத்தி

எல்லா ஜீவர்களின் பிறப்பும்

சேரும்

உண்டாகிறது.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top