பகவத் கீதை வெண்பா

நீதி கருமத்து நின்மலமா நற்பயனைக்
கோதின் முதற்குணத்தே கூறுவரான் – மீதியலுந்
துக்க மிடைக்குணத்திற் சூழ்பயனாம் பிற்குணத்திற்
றக்க வறிவின்மை தான்.        14 . 16

கோது இல் முதல் குணத்தே

குற்றமற்ற ஸத்வ குணத்தினாலுண்டாகும்,

நீதி கருமத்து நல் பயனை

பற்றற்ற புண்ய கர்மங்களுடைய பயனை,

நின்மலமா கூறுவரால்

துன்பம் சிறிதும் அற்றிருக்கை என்று (ஸத்வகுணத்தின் பெருமை அறிந்தவர்கள்) கூறுகிறார்கள்;

இடைக்குணத்தில்

நடுக்குணமான ரஜோகுணத்தினால்,

சூழ்பயன்

உண்டாகும் பயன்,

மீது இயலும் துக்கம் ஆ

ஸாம்ஸாரிகத் துன்பத்தொடரே என்றும்,

பின் குணத்தில்

கடைசியான தமோ குணத்தினால்,

சூழ்பயன்

உண்டாகும் பயன்,

தக்க அறிவு இன்மை தான்ஆ

நல்ல அறிவு இல்லாமற் போவதேயாம் என்றும் (அந்தந்த குணங்களின் தன்மையறிந்தவர்கள் கூறுகிறார்கள்.)

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top