பகவத் கீதை வெண்பா முற்குணத்தி லாகு முழுதுணர்வு தானிடையி லற்குணத்து லோப மதுவுண்டாம் – பிற்குணத்தி லோராமை மோக முணராமை யுண்டாகுஞ் சீரார் புகழ்விசயா சேர்ந்து. 14 . 17 சீரார் புகழ் விசயா சிறப்பு மிக்க புகழை உடைய அர்ஜூனா! முன் குணத்தில் முதல் குணமான ஸத்வ குணத்தினால், முழுது உணர்வு தான் ஆகும் ஆத்மாவை நேரே காண்பது வரையிலான அறிவு உண்டாகும்; இடையில் அல் குணத்து நடுவிலுள்ள தீய ரஜோகுணத்தால், லோபம் அது உண்டாம் ஸ்வர்க்கம் முதலான பலன்களில் ஆசை உண்டாகும்; பின் குணத்தில் பிற்பட்ட (தாழ்ந்த) தமோகுணத்தால், ஓராமை கவனமில்லாமையால் விளையும் தீயகர்மங்களில் முயற்சியும், மோகம் அதனால் விளையும்) விபரீத ஜ்ஞாநமும், உணராமை (அதனால் விளையும்) அறிவின்மையும், சேர்ந்து உண்டாகும் ஒன்று கூடி உண்டாகும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0